உடல் வெடித்து கொடுமையாக இறந்த காமெடி நடிகர்கள்..!


ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் எந்த அளவிற்கு பேசப்படுகிறார்களோ அந்த அளவிற்கு அதின் நகைச்சுவை கலைஞர்களும் பேசப்படுவர். சிறிது நேரமே படத்தில் தோன்றினாலும் மனதில் நீங்கா இடம் பெறுவர். அந்த வகையில் இடம்பெற்ற சகோதரர்கள் தான் சகாதேவன், மகாதேவன்.

இவர்களின் உடல் தோற்றம் தான் ஒரு நகைச்சுவை கலைஞராக இவர்களை நிறுத்தியது. இருவரும் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சுந்தரகாண்டம் என்ற படத்தில் காமெடி நடிகரான அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்துள்ளனர்.

உடல் எடை இவர்களுக்கு எந்த அளவிற்கு புகழை கொடுத்ததோ அந்த அளவிற்கு வேதனையும் கொடுத்தது. மரபியல் ரீதியான இவர்களது உடல் எடை அதிகரிப்பு நாளுக்கு நாள் கூடி கொண்டே சென்றது. சரியான சிகிச்சை இல்லாததால் உடலில் பல நோய்களும் வந்தது. அண்ணன் மகாதேவன் 5 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து போனார்.

சகாதேவன் சர்க்கரை வியாதி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது காலில் புண் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால் அவரது வலது காலை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் உடலில் பலவேறு இடங்களில் வெடிப்புகள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி இரண்டே நாட்களில் துடிதுடித்து இறந்து போனார்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!