ஜோ பைடன் நல்ல மனுசன்…. நெருக்கம் காட்டும் கிம் ஜாங்-உன் .!!


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக பெருமைப்படுகிறார். மேலும் தன் நாட்டின் பொருளாதார தடைகளை உடைப்பதற்காக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2019 வருடத்தில் ஜூன் மாதத்தில் கிங் ஜாங் உன், ட்ரம்பை சந்தித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர்களில் ட்ரம்ப் தான் முதன்முதலாக கிம் ஜாங் உன்னை சந்தித்துள்ளார். எனினும் இவர்களின் சந்திப்பிற்கான முக்கியமான நோக்கம் செயல்படுத்தப்படவில்லை.

இதனால் சமீபத்தில் மக்களுக்கு உரையாற்றிய கிம் வடகொரியாவின் அணு ஆயுதத்திற்கு திட்டங்களை பலப்படுத்துவதாக உறுதி கூறினார். மேலும் தன் கொள்கைகளை அமெரிக்கா மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். மேலும் ஐ.நாவால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் மற்றும் எல்லைகள் கொரோனா பாதிப்பினால் முடக்கப்பட்டது. எனவே வட கொரியாவின் பொருளாதாரம் தற்போது பின்தங்கியுள்ளது.

ட்ரம்பிலிருந்து இருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறைகளை ஜோபைடன் கொண்டிருக்கிறார். எனவே அவர் புதிய முயற்சிக்கான தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கிம் கூறியுள்ளார்.மேலும் வடகொரியாவின் அணு ஆயுத சேகரிப்பானது அமெரிக்கா உட்பட அதன் நட்பு நாடுகள் பலவற்றிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நாடுகளுக்கு வட கொரியாவின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தற்போது வடகொரியாவின் நட்பு நாடாக சீனா மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!