பெண் வாடிக்கையாளர் கண்முன் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய்!


வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை, அவரின் வீட்டு முன்பே அமர்ந்து மெக்டொனால்டு நிறுவன டெலிவரி பாய் சாப்பிட்ட வீடியோ தான் சமூகவலைதளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

லண்டனில் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான மெக்டொனால்டு நிறுவனத்தில் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை டெலிவரி செய்வதற்காக வாடிக்கையாளரின் வீடு வரை எடுத்து வந்த டெலிவரிபாய், அது தவறான முகவரி என்று கூறி ஆர்டரை தானே ரத்து செய்துள்ளார். பிறகு வாடிக்கையாளரின் வீட்டின் முன் அமர்ந்து தானே அந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த பெண் வாடிக்கையாளர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மொபைலில் இந்த காட்சியை படம்பிடித்து, அதனை தனது சகோதரரிடம் கொடுத்து டுவிட்டரில் பதிவிட செய்துள்ளார். சமூக வலைதளங்கள் மட்டுமின்றி பிற தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை கேள்வி கேட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதே போன்றதொரு சம்பவம் சமீபத்திலும் நடந்துள்ளதால் இது தொடர்பாக மெக்டெனால்டு நிறுவனத்திடம் புகார்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த வாடிக்கையாளருக்கு அவரது பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் மெக்டொனால்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் பல பகுதிகளிலும், டெலிவரி பாய், ஆர்டர் செய்த உணவில் பாதியை தான் சாப்பிட்டு விட்டு, மீதியை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த வீடியோ வேகமாக பரவியது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!