செயற்கை சுவாச உதவியுடன் போராடும் சசிகலா


சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. நிம்மோனியா காய்ச்சல் இருப்பதாக வந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. வரும் 27 ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக இருந்த நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றைய சிடி ஸ்கேன் ரிப்போர்ட் படி சசிக்கு லேசான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று(ஜன.,21) இரவு உடல்நிலை நன்றாக இருந்தது. இன்று காலை மருத்துவமனை வட்டார தகவலின்படி; நுரையீரல் அதிக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிமோனியா காய்ச்சல் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை.

மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு கூறப்படுகிறது. அவருக்கு சுவாச சிரமம் ஏற்படுவதால் தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. சசிகலா உறவினர்கள் பலர் பெங்களூருவில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.- source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!