வாரத்திற்கு 2 முறை இப்படி செய்தால்.. முகத்திலுள்ள பருக்கள் ,எண்ணெய் பசை நீங்குமாம்..!


சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும். கடலை மாவு இயற்கைப் பொருள் என்பதால், எந்த வகையான சருமத்தினரும் இதனைப் பயன்படுத்தலாம்.

எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.


கோடையில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்கவும், வெயிலில் சருமம் கறுக்காமல் இருக்கவும், பொலிவைக் கொடுக்கவும் 1 தேக்கரண்டி முட்டை கோஸ் சாறு, 1 தேக்கரண்டி ஈஸ்ட் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து முகம், காது பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.

பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5-10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிம்பிள் நீங்குவதோடு, எண்ணெய் பசையும் கட்டுப்படுத்தப்படும்.

தினமும் பப்பாளியை சிறிது அரைத்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகம் பிரகாசமாக இருக்கும்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!