மது விற்பனை செய்த மாமியார்.. அவமானம் தாங்க முடியாமல் மருமகள் விபரீத முடிவு..!


கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானமடைந்த மருமகள் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருதங்குடி கிராமத்தை சேர்ந்த கமலாம்மாள் 20 ஆண்டுகளாக கள்ளத்தனமாக வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு, மாமியார் கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவது சகுந்தலாவுக்கு தெரிய வந்தது. கள்ளத்தமான மது விற்பனை செய்ய கூடாது என்று மாமியாரை சகுந்தலா தடுத்துள்ளார்.

பின்னர் திருந்திய கமலாம்பாள் அதை விட்டுள்ளார். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த சூழலில், மருமகளுக்கு தெரியாமல் மது பாட்டில்களை வாங்கி வந்த கமலாம்பாள் வீட்டின் அருகேயுள்ள கீற்று கொட்டகையில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த பொதுமக்கள் கமலாம்பாள் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்த கீற்று கொட்டகையை சேதப்படுத்தினர்.

மேலும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.அங்கு வந்த போலீசார் கமலாம்பாளை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து கொண்டிருந்தன.

இந்த சம்பவத்தால் அவமானமடைந்தததாக கருதிய சகுந்தலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!