பாலியல் அழகிகளுடன் துருக்கி மத வழிபாட்டுத் தலைவர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!


துருக்கிய மத வழிபாட்டுத் தலைவர் ஒருவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்தவர் அட்னான் அக்தார்( வயது 64) வழிபாட்டு பிரிவு ஒன்றின் தலைவராக இருந்தார். தனது தொலைக்காட்சி சேனலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கவர்ச்சியான பெண்கள் சூழ பிரசங்கம் நடத்த்தி வந்தார். அவரின்ஆன்லைன் ஏ 9 தொலைக்காட்சி சேனல் 2011 இல் ஒளிபரப்பத் தொடங்கிய போது துருக்கியின் மதத் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் குவிந்தது.

ஹருன் யஹ்யா என்ற புனை பெயரைப் பயன்படுத்தும் இவர் டார்வின்ஸ் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்காக அவர் புத்தகங்களை எழுதி உள்ளார்.

அக்தார் மீது பல் வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2016 ல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக துருக்கி அரசு இவர் மீது குற்றஞ்சாட்டியது.

இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அக்தார் கைது செய்யப்பட்டார். ஸ்தான்புல் மற்றும் பிற நகரங்களில் உள்ள அவரது அமைப்புகளில் சோதனை நடத்தி அவரது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

துருக்கியின் ஊடக கண்காணிப்புக் குழு அக்தாரின் தொலைக்காட்சி சேனலுக்கு அபராதம் விதித்ததோடு, அவரது நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புகளுக்கு தடை விதித்தது. அவரைச் சுற்றிலும் நிற்கும் அழகிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

10 க்கும் மேற்பட்ட தனித்தனி குற்றச்சாட்டுகள் அக்தார் மீது சுமத்தப்பட்டது. தற்போது இந்தவழக்கில் துருக்கி நீதிமன்றம் அவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது என அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள 64 வயதான அக்தார் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு 1,000 தோழிகள் இருப்பதாக டிசம்பர் மாதம் அக்தார் தலைமை நீதிபதியிடம் கூறி இருந்தார். அக்தாரின் கூட்டாளிகளில் 13 பேருக்கும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அதிக வருட தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 236 சந்தேக நபர்கள் விசாரணையில் உள்ளனர், அவர்களில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அனடோலு தெரிவித்துள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!