கோயிலுக்குள் பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்…!


கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!