உணவகத்திற்கு காதலனுடன் சென்ற பெண்ணை வெளியேற்றியது ஏன்..?


ஆஸ்திரேலியாவில், காதலனுடன் சாப்பிடுவதற்காக உள்ளாடை அணிந்த நிலையில், உணவகத்திற்கு சென்ற சுற்றுலா பெண் பயணி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் North Bondi பகுதியில் இருக்கும் North Bondi Fish உணவகத்திற்கு இத்தாலியா சுற்றுலா பெண் பயணி Martina Corradi தன்னுடைய காதலனுடன் சென்ற நிலையில், அவர் பலர் முன் வெளியேற்றப்பட்டதாக வேதனையுடன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அந்த உணவகத்தின் மேலாளர், இது குறித்து Martina Corradiவிடம் மன்னிப்பு கோரியதாகவும், அவருக்கு இலவச உணவை வழங்குவதாகவும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

மேலும், அவர் நாங்கள் இந்த் சம்பவம் குறித்து மறுபரிசீலனை செய்யவுள்ளோம், Martina Corradi-வையும், அவருடன் வந்த நபரை உணவகத்தை விட்டு வெளியேற கூறியது, எங்களுடைய பிழை என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

நாங்கள் Martina Corradi தொடர்பு கொண்டு, இது போன்ற தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளோம், அவளையும் அவளுடன் வந்தவரையும் மதிய உணவிற்காக அல்லது இரவு உணவிற்காக அழைத்தோம்.

நாங்கள் ஒரு சாதாரண ஆடைக் குறியீட்டை ஆதரிக்கிறோம், இருப்பினும் Martina Corradi வெளியேறச் செல்லக் கூடாது.

இதன் விளைவாக, எங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஆடைக் குறியீடு உள்ளிட்ட எங்கள் நெறிமுறைகளில் மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். எங்கள் உணவகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் உட்பட அனைவரையும் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த Martina Corradi, ஒரு ஹை ஹீல்ஸ் மற்றும் உயர் இடுப்பு பேண்ட் மற்றும் மேல் அணிந்திருக்கும் உள்ளாடை அணிந்திருந்தார்.

அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, நான் இந்த ஆடையுடன் உணவகத்திற்கு சென்றதால், சங்கடப்படுத்தப்பட்டேன். புண்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!