தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்கள்- இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு


எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தமிழக மீனவர்களின் படகுகள், வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். அதேபோல் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களை தாக்குகிறார்கள். இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அத்துமீறி தாக்கி மீனவர்களையும், படகுகளையும் சிறை பிடிக்கிறார்கள்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா – இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இலங்கையிடம் வலியுறுத்தி இருக்கிறது.

இதனால் மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற சூழ்நிலையில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கை பருத்தித்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து கொண்டு வாருங்கள். இல்லையென்றால் படகுகளின் எண்களையாவது கொண்டு வாருங்கள்.

இந்திய மீனவர்களின் படகுகளை என்னிடம் ஒப்படையுங்கள். வரும் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!