காயங்களுடன் மயக்க நிலையில் கைவிடப்பட்ட சிறுமி! நள்ளிரவில் சிக்கிய பெண் டாக்டர்..?


அவிநாசியில், குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண், நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள தண்டுக்காரன்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள குப்பையை பிரித்தெடுக்கும் கிடங்கில், நேற்று முன்தினம் மதியம், 6 வயது பெண் குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், அந்த சிறுமியை மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமிக்கு சுய நினைவு திரும்பாத நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இதுகுறித்து, சேவூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். அதே நேரம், நேற்று முன்தினம் மதியம் முதல், 35 வயது மதிக்கதக்க அந்த பெண் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக, சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், அந்த சிறுமி கிடந்த இடத்துக்கு அருகே, குழந்தைக்காக வாங்கப்பட்ட தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் குவியலாக கிடந்தன.

அதில் இருந்த கடையின் பில்லை எடுத்து போலீசார் விசாரித்தனர். அதில், பெங்களூருவில் உள்ள ஒரு ஷாப்பிங்மாலில் ஒரு 35 வயது மதிக்கதக்க பெண்ணுடன், மயக்க நிலையில் இருந்த சிறுமியும் இருந்தது தெளிவாக, தெரிய வந்தது.சிக்கியது எப்படி?இதற்கிடையில், சிறுமி துாக்கிவீசப்பட்ட இடத்தில் இருந்து, இரவு, 11:00 மணிக்கு, திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ஒரு பஸ்சை கைகாட்டி நிறுத்தி முயன்றுள்ளார்.

பஸ் நிற்காமல் செல்லவே அடுத்த வந்த பஸ்சையும் நிறுத்தி ஏற முயற்சித்துள்ளார்; ஆனால், பஸ் நிற்கவில்லை.இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் பஸ் ஏற முயற்சி செய்து கொண்டிருப்பதாக, அப்பகுதியில் சென்ற சிலர் கிராம மக்களிடம் தகவல் தெரிவிக்க, கிராம மக்கள் அங்கு விரைந்து, அந்த பெண்ணை பார்த்தனர்.

பின், சேவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அந்த பெண் சைலஜா, 39 என்பதும், பெங்களூருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பெங்களூருவில் கிளினிக் வைத்துள்ளார். அவரது கணவர் பெயர் தர்மபிரசாத் என, அவர் கூறியுள்ளார். அவர் தஞ்சாவூரை சேர்ந்தவர்; ஐந்தாண்டுக்கு முன், விவகாரத்து பெற்றுள்ளார்.

அந்த பெண், தான் டாக்டர் எனவும், பெங்களூருவில் கிளினிக் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குப்பை தொட்டியில் துாக்கி வீசப்பட்ட குழந்தை தன்னுடையது தான் எனவும் தெரிவித்துள்ளார்.அந்த பெண் மிகுந்த மன அழுத்ததுடன் காணப்பட்ட நிலையில், திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த பெண் ஏன், எதற்காக அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசியெறிய வேண்டும்; பெங்களூருவில் இருந்து அவிநாசிக்கு ஏன் வந்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.- source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!