பிக் பாஸ் கொடுத்த டுவிஸ்ட்…. வேற லெவலில் ஆடிய சோம்..!


இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 80 நாட்கள் ஆகிறது. இந்த போட்டியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது ஆட்டத்தில் அனிதா, ஆரி, பாலா, ஷிவானி, ஆஜித், ரியோ, ரம்யா, சோம் மற்றும் கேபி ஆகியோர் உள்ளனர் .

நேற்றைய நிகழ்ச்சியில் பால் கேட்ச் டாஸ்க்கில், ஷிவானி, பாலா, அனிதா, ஆரி, பாலா ஆகியோர் ஒரு டீமாகவும் , ரியோ, ரம்யா, சோம் மற்றும் கேபி மற்றொரு டீமாகவும் விளையாடினர். இதில் ரியோ டீம் லீடிங்கில் உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் ப்ரோமோவில், மூன்றாம் பகுதி. உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தனித்தனியே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

ப்ளாஸ்மா டிவியில் யார் பெயர் வருகிறதோ அவர்கள் ஓடி வந்து பந்தை பிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வர ஹவுஸ்மேட்ஸ் ஓடிவந்து பந்தை பிடிக்கின்றனர். இதில் சோம் பெயர் 2 முறை வர, அவர் மூன்று பந்துகளை பிடித்துள்ளார். இதை ஹவுஸ்மேட்ஸ் கேள்வி கேட்பது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.- source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!