என் அக்காவை திட்டாதீங்க….. ரம்யா பாண்டியன் சகோதரர் வேதனை..!


மொட்டை மாடியில் இடுப்பை கவர்ச்சியா காட்டி திடீரென பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சினிமா வாய்ப்புகள் நிறைய வரும் என காத்திருந்த அவருக்கு எதுவும் வரவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார். அதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

தொடக்கம் முதலே சிரித்துக்கொண்டே சேவ் கேம் விளையாடி வருகிறார். குறிப்பாக ஆரியை அவர் தொடர்ந்து நாமினேட் செய்து வருகிறார். ஏனெனில், ஆர்யா சிறப்பாக விளையாடி வருவதால், அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால், வெளியே ஆரிக்கு வெளியே அதிக ஆதரவு இருப்பதால் தற்போது வரை அவரை யாராலும் வெளியேற்றமுடியவில்லை.ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆரியின் ஆதரவாளர்கள் ரம்யா பாண்டியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசுராம் பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் ‘ஆரியின் ரசிகர்கள் என் சகோதரி ரம்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஒரு பெண் போட்டியாளரை இப்படி திட்டுவது சரியல்ல. பிக்பாஸ் ஒரு விளையாட்டு. அவர்கள் விளையாடி வருகிறார்கள். எனவே, திட்டுவதை நிறுத்துங்கள். ஆரியை நான் மிகவும் மதிக்கிறேன். அவரே வெளியே வந்தால் கூட இதை அனுமதிக்க மாட்டார்’ என பதிவிட்டுள்ளார்.- source: flash.news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!