மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு.. சோனு சூட்டிற்கு கோவில் கட்டிய ஊர் மக்கள்..!


கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேர்ந்த ஊரடங்கில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேலை உணவிற்கே திண்டாடி வந்தனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முடிஞ்ச உதவியை மக்களுக்கு செய்து வந்தனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் 28 மாநிலங்களுக்கு உதவி செய்துள்ளார்.

அவர் உதவி செய்வதற்காக தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்தார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் கொரோனா காலத்தில் உதவிய அவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூட்டிற்கு கோயில் கட்டி இருக்கிறார்கள்.

இந்த கோயில் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்து பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினார்கள். பிறமாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல சோனு சூட் உதவியுள்ளார். அது மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புத் தளத்தையும் அமைத்துக்கொடுத்து அந்த கிராம மக்களின் நீங்க இடம் பிடித்துள்ளார். அவரின் மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு தான் இந்த கோயில் என கிராமத்தினர் கூறியுள்ளனர்.- source: tnpanchayat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!