14ஆவது மாடியில் இருந்து உள்ளாடையுடன் விழுந்த விஞ்ஞானி..!


ரஷ்யாவில் அடிக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து விஞ்ஞானி ஒருவர் உள்ளாடையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலெக்சாண்டர் ககன்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017 வரை சுமார் 13 வருடங்கள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் இருந்து அதாவது 14ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது மரணம் தொடர்பாக 45 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறப்பதற்கு முன்பு அவரது குடியிருப்பில் சிலர் தகராறு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் விஞ்ஞானியின் மரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!