உலக அளவில் பிரபலமான தாராள பிரபு…. மொத்தம் 150 குழந்தைகள்..!


பிரிட்டன் நாட்டில் Ilfordல் என்னும் பகுதியில் வாழும் அமெரிக்கரான Joe Donor (50), கொரோனா நேரத்திலும் பிரிட்டன் பெண்கள் சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். அவர்களில் மூன்று பேர் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் தனக்குக் கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசுகளிலேயே சிறந்த பரிசு என்கிறார் Joe.

ஆண்டுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள் என் மூலம் பிறந்துவிட்டார்கள், என்றாலும் இன்னமும் நிறுத்தமாட்டேன் என பெருமை கொள்கிறார். தன்னிடம் உயிரணு தானம் பெற்ற பல பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் தனக்கு குழந்தையின் புகைப்படத்தை அனுப்புவதுண்டு என்று கூறும், Joe சில பெண்கள் இன்னமும் தன்னுடன் தொடர்பிலிருப்பதாகவும் கூறுகிறார்.

நாளைக்கு அந்த குழந்தைகள் தங்கள் ஒன்று விட்ட சகோதர சகோதரிகளை தேடும்போது அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் Joe. Joe, அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளுக்கு பயணம் செய்து உயிரணு தானம் செய்துள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான தாராள பிரபு போல் விந்து தானம் செய்து வருகிறார்.- source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!