லஞ்ச வழக்கில் சிக்கி வெளியே வந்த இன்ஸ்பெக்டர் செய்த கொடூரம்..!


தேனிமாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த பெருமாள்பாண்டி என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் ஆய்வாளராக இருந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கில் அரசு மருத்துவரான நமச்சிவாயம் என்பவரை வழக்கிலிருந்து விடுப்பிப்பதற்காக பெருமாள்பாண்டி லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.

இந்த புகாரில் லஞ்ச ஒழிப்புதுறையினரால் அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை சிறப்பு நீதிமன்றம் பெருமாள் பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டத்தையடுத்து ஜாமினில் வெளியில் வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தப்போது அவருக்கும், அவரது மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பேது ஆத்திரம் அடைந்த பெருமாள்பாண்டி, தனது மனைவி உமாமீனாட்சியை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த உமா மீனாட்சி ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள்பாண்டி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!