காதலனை நம்பிச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! அம்மாவிடம் கடைசியாக சொன்ன வார்த்தை!


இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞன், அப்பெண்ணை ஜாதி காரணம் காட்டி பணம் கேட்டதால், அப்பெண் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூரைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் குடும்பத்தாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கற்பகத்தின் பெற்றோர் மகளை காணவில்லை என்று புகார் கொடுக்க, புகாரின் பேரின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் அலெக்ஸ்பாண்டியனை திருமணம் செய்துகொண்டு சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் வசிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இருவருக்குமே திருமண வயது நிரம்பியதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை கற்பகம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ,உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

என் மகள் இறப்புக்கு அலெக்ஸ்பாண்டியன் தான் காரணம் என்று கண்ணீர்விட்டு கதறியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன், கணவர் அலெக்ஸ்பாண்டியன் அவரது பெற்றோர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னை ஜாதியைச் சுட்டிக்காட்டி திட்டுவதாக கற்பகம் போனில் அழுதபடி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் நீ தாழ்ந்த ஜாதி என்பதால் என் ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை, எனவே வெளிநாட்டில் வேலை செய்யும் உன் அண்ணனை 10 லட்ச ரூபாய் அனுப்பச் சொல், வசதியான பெண் என்றாவது என் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு என்று கற்பகத்தை அடித்து துன்புறுத்தி வந்ததாக பெற்றோர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ தினமான திங்கட்கிழமை மதியம் சுமார் 12 மணிக்கு பெற்றோரை போனில் அழைத்த கற்பகம், நான் உங்கள் பேச்சைக் கேட்காமல் அலெக்ஸ்பாண்டியனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்தது தவறு என்று உணர்கிறேன்.

கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரிடமிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கற்பகம் கதறி அழுதுள்ளார். அப்போது அவரிடம் இருந்து போனை அலெக்ஸ்பாண்டியன் பிடுங்கிக் கொண்டதாகவும் கற்பகத்தின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அலெக்ஸ்பாண்டியனைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றன.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!