நடிகை சித்ராவின் கடைசி நாள் படப்பிடிப்பு காட்சிகள் – வீடியோ வைரல்!


சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதியில் நாசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்ட 9ஆம் தேதியில் அவர் கலந்துகொண்ட படப்பிடிப்பு காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. சித்ராவின் கடைசி தருணம் என்ற டைட்டிலில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கடைசியாக பாட்டு பாடியது, ஆடியது, சிரித்தது, ஜாலியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகள் உள்ளன. இவ்வளவு சுறுசுறுப்பாகவும் ஜாலியாகவும் இருந்த சித்ரா இன்று நம்மிடையே இல்லை என்று ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் அளித்து வருகின்றனர்.

ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சிக்காக சித்ரா கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.- source: indiaglitz

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!