விபச்சாரம் செய்யல.. ஆனால் மசாஜ் சென்டரில் இருந்தேன்.. டிக்டாக் சூர்யா விளக்கம்..!

திருச்சியில் பாலியல் தொழில் கொடிகட்டி பறந்து வருவதாக பலமுறை போலீசாருக்கு புகார் வந்துள்ளது.. ஸ்பா என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், திருச்சியில் கமிஷனர் லோகநாதன் உத்தரவில், திருச்சி தில்லை நகர், உறையூர், கேகேநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் விபச்சாரத் தடுப்பு தனிப்படை போலீசார் கடந்த 9ம் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது உறையூர் பகுதியில் சிக்கியவர்தான் ரவுடி பேபி சூர்யா… அவருடன் சேர்த்து 10 பேரை போலீசார் கைது செய்தனர்.. 12 பெண்கள் மீட்கப்பட்டனர்.. ஏழை பெண்களை வேலைக்கு வைத்து கொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனராம். இதுபோல 5 இடங்களில் இந்த போலியான ஸ்பா சென்டர் நடந்து வந்துள்ளது.. அதில் ஒரு சென்டரை நடத்தும் ஓனருடன் சூர்யாவுக்கு பழக்கம் இருந்துள்ளது.

இதையடுத்து போலீசார் சூர்யாவை கைது செய்தாலும், நான் எந்த தப்பும் செய்யவில்லைஎன்று சூர்யா ஆரம்பம் முதலே சொல்லி கொண்டிருந்தார். எனினும் கைதானவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்… மீட்கப்பட்ட 12 பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிக்டாக் சூர்யா, தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்று விளக்கம் தந்துள்ளார்.. இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: “சம்மந்தப்பட்ட மஜாஜ் சென்டரில் நான் இருந்தது உண்மைதான்… போலீசார் சோதனை நடத்திய மசாஜ் சென்டர் என்னுடையது ஃபிரண்டுடையது.

திருச்சிக்கு எப்போதெல்லாம் போவேனோ, அப்போதெல்லாம் அங்கே போவேன்.. அது உரிமம் பெற்ற மசாஜ் சென்டர்.. எனக்கும் பாலியல் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை.. நான் விபச்சாரம் செய்யல.. நான் சோபாவில் உட்கார்ந்திருந்தேன்.. அப்போ மப்டியில் வந்த போலீஸ் என் மொபைலை பிடுங்கிட்டாங்க.. அப்போ போலீஸ்கிட்ட நான் கேட்டேன், “ஏன் சார் என்னை கூட்டிட்டு வந்திருக்கீங்க? நான் எந்த தப்பும் பண்ணல? எந்த ஒரு ஆணும் என்னுடன் இல்லையே? கான்டம் போன்ற விஷயங்களும் எதுவும் கையில் இல்லையே?

மொபைல்ல யாரிடமாவது தப்பா பேசியிருந்தாலோ, அல்லது ரூமில் யாருடனாவது இருந்தாலோ பரவாயில்லையே.. நான்தான் சோபாவில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தேனே”ன்னு கேட்டேன்.. அதற்கு போலீசார், உங்க மேல தப்பு இல்லைன்னா அங்கே வந்து சொல்லுங்க என்று சொன்னாங்க.. அதுப்பறம்தான் என் மீதான விளக்கத்தை தந்தேன்.. வெறும் 6 மணி நேரம் மட்டும்தான் ஸ்டேஷனில் இருந்தேன்.. விசாரணை, கொரோனா டெஸ்ட்டுக்கு 6 மணி நேரம் போலீஸ் கஸ்டடியில் இருந்தேன்.. அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!