எனக்கு ஒரு சட்டம் நிஷாவுக்கு ஒரு சட்டமா? ரியோவை வறுத்தெடுத்த அனிதா


விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கண்ணாடி அறையில் இருக்கும் அனிதா சம்பத், வெளியே நிற்கும் ரியோ ராஜிடம் “நிஷா அக்கா பண்ண ஒரு விஷயம்னால அர்ச்சனா அக்கா அழுதாங்க. அந்த கேமே ஒரு நிமிஷம் டவுன் ஆச்சு. அது உங்களுக்கு boring ஆக்கல கேமை” என்று சொல்கிறார்.

அதற்கு ரியோ “அந்த ஐடியாவை கொடுத்தது நீ” என்று சொல்கிறார். பின், அனிதா “அப்போ நிஷா அக்கா அதே விஷயத்தை செஞ்சா உங்களுக்கு பிடிக்கலை” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “பிடிக்கலை” என்று சொல்கிறார். பின், அனிதா “நான் அதே விஷயத்தை செஞ்சா சுவாரஸ்யம் இல்ல” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “பிடிக்கலைன்னு சொல்றதுக்கும் boring-ன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு” என்று சொல்கிறார்.

பின், அனிதா “அதெல்லாம் try பண்ண நிஷா அக்கா best performer” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “கேப்டன்சியை வச்சு நான் சொல்லவே இல்லையே” என்று சொல்கிறார். பின், அனிதா “எல்லாத்தையும் சேர்த்து தான் சொல்லணும். அப்பன்னா நீங்க தப்பா சொல்லியிருக்கீங்க” என்று சொல்கிறார். உடனே, ரியோ “thank you” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அப்போது அனிதா “பார்த்தியா கரெக்ட் point பேசினா போயிடுவாரு. இதான் ரியோ” என்று சொல்கிறார். பின், ரியோ திரும்பவும் அனிதா அருகில் வந்து “i am not. i am not” என்று கத்தி கோபமாக பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.- source: filmyfocus

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!