சேவலைக் கொன்றதற்கு தண்டனையா? வித்தியாசமான நாடுதான்!


தனக்கு எரிச்சலூட்டிய சேவலைக் கொன்றதற்காக ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்துள்ளது பிரான்ஸ் நாட்டில்! மனிதர்களைவிட சில நாடுகளில் விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுபோல் தெரிகிறது.

வகை வகையாக மாமிசம் சாப்பிடும் ஒரு நாட்டில், ஒரு சேவலைக் கொன்றதற்கு சிறையா என்று விசாரித்தால், நடந்த சம்பவத்தின் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

பிரான்சின் Ardèche என்ற பகுதியில் வாழும் Sebastien Verney என்பவரின் சேவல் Marcel. அது விடியற்காலையில் கூவி தன் தூக்கத்தைக் கெடுப்பதால் எரிச்சலடைந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் துப்பாக்கியால் அதை சுட்டு, கூர்மையான கம்பி ஒன்றால் அதைக் குத்திக்கொன்றுள்ளார்.

தன் சேவலுக்காக நீதி கேட்டு மனு ஒன்றை Sebastien உருவாக்க, அதில் 100,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, விலங்குகளை துன்புறுத்துதல் மற்றும் பிற குற்றங்களுக்காக, Marcelஐக் கொன்றவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 300 யூரோக்கள் அபராதமும், மூன்று ஆண்டுகளுக்கு ஆயுதம் வைத்திருக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டியதில்லை, பொலிஸ் கண்காணிப்பில் இருக்கும் அவர் மீண்டும் தவறிழைத்தால் சிறை செல்ல நேரிடலாம்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!