இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் வருமானம் எவ்வளவு தெரியுமா..?


இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் சீசனில் மொத்தம் ரூ.255 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த வருமான கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை விட ரூ.45 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை அய்யப்பன் சீசன் மகரஜோதி தரிசனத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலின் மூலம் கிடைத்துள்ள வருமானத்தின் உதவியால் அடுத்த வருடம் வரும் அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து கொடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கும் வசதிக்கு நிகராக அய்யப்பன் பக்தர்களுக்கும் பல முக்கிய வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனை செய்ய விரைவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவிருப்பதாகவும் கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த வருடம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!