மியான்மரில் விஷ பாம்புகளிடம் அன்பு காட்டி அடைக்கலம் கொடுக்கும் துறவி


மியான்மரில் விஷ பாம்புகளிடம் அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து வருகிறார் ஒரு துறவி

மியான்மர் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் உலகளாவிய மையமாக மாறியுள்ளது, இங்கிருந்து விலங்குகள் பெரும்பாலும் அண்டை நாடுகளான சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

மியான்மரில் அதிக அளவு பாம்ப்புகள் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு துறவி பாம்புகளை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மியான்மரின் யாங்கோனில், துக்கா டெட்டோ மடத்தில் விலேதா சிகாட்டா என்ற 69 வயதான துறவி உள்ளார். இவர் மலைப்பாம்புகள், ராஜ நாகம் மற்றும் நாகப்பாம்புகள் உள்ளிட்ட விஷ பாம்புகளை வளர்த்து பராமாறித்து வருகிறார். இவைகளுக்கு என புகலிடம் கட்டி உள்ளார். இந்த விஷ பாம்புகளை காப்பாற்றுவதற்காக இதைச் செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு புகலிடம் கொடுக்கத் தொடங்கினார். விலேதா இயற்கை சுற்றுச்சூழல் சுழற்சியைப் பாதுகாப்பதாகக் கூறினார்.

துறவி பாம்புகளுக்கு உணவளிக்க சுமார் 300 அமெரிக்க டாலர்களுக்கு நன்கொடைகளை நம்பி உள்ளார். பாம்புகள் காட்டுக்குத் திரும்பத் தயாராகும் வரை விலேதா பாம்புகளை தன்னுடனுன் வைத்து பராமாறித்து வருகிறார்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!