திடீரென வீடு திரும்பிய போலீசார்.. மனைவி வேறொரு ஆணுடன்… பின் நடந்த விபரீதம்!


அமெரிக்காவில் போலீசார் ஒருவர் முன்கூட்டியே இரவுப்பணியில் இருந்து திரும்பிய நிலையில், தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

போலீசாரான Justin Ellis (35) இரவுப்பணிக்கு சென்றிருந்திருக்கிறார். திடீரென அவர் முன்கூட்டியே வீடு திரும்பிய நிலையில், தன் வீட்டில் முன்னால், அந்த அதிகாலை நேரத்தில், தன் மனைவியுடன் அவரது உடற்பயிற்சியாளரான Patrick Catania (30) பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்.

இரவுப்பணிக்கு சென்றிருந்த Justin அவ்வளவு சீக்கிரம் வருவார் என எதிர்பார்க்காததால் அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், Justinக்கும் Patrickகுக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட, Patrick ஒரு பேஸ்பால் மட்டையை எடுத்து Justinஐ அடிக்க ஓங்கியிருக்கிறார்.

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த Justin, உடனே தனது துப்பாக்கியை எடுத்து Patrickஐ சுட்டிருக்கிறார். அதில் Patrick படுகாயமடைந்த நிலையில், இருவருமே அவசர உதவியை அழைத்துள்ளனர்.

தனது கட்சிக்காரர் செய்தது நியாயமே, தான் வீட்டில் இல்லாதபோது, அதிகாலையில் தன் மனைவியுடன் தன் வீட்டு காம்பவுண்டுக்குள் Patrick அத்துமீறி நுழைந்ததாலும், மட்டையை ஓங்கியதாலும்தான் Justin அவரை சுட்டிருக்கிறார் என்று அவரது சட்டத்தரணி வாதிடுகிறார்.

அப்படி இல்லை, Justin தன் கட்சிக்காரரை பின் தொடர்ந்தார் என்றும், அவர் துப்பாக்கியை எடுத்த பின்புதான் அவர் மட்டையால் அடிக்க ஓங்கினார் என்றும் Patrickஇன் சட்டத்தரணி வாதிடுகிறார்

இதற்கிடையில் Justin பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், விசாரணை தொடர்கிறது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!