16 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் வாலின் ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா..?


16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் 180 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட வால் ஒன்று மெக்சிகோவில் நேற்று ஏலத்துக்கு வந்தது.

பழங்கால டைனோசரின் 180 கிலோ வால்: மெக்சிகோவில் ஏலத்துக்கு வந்தது

லத்தீன் அமெரிக்க நாடுகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கிய இரு நிலநடுக்கங்களால் மெக்சிகோவில் 480 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் கடுமையாக சேதமடைந்தன. இவற்றை சீரமைக்க நிதி திரட்டுவதற்காக சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மொராக்கோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட 56 அடி நீளமும், 22 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட அரியவகை டைனோசரின் பதப்படுத்தப்பட்ட 4 அடி நீளம்கொண்ட வால் ஒன்றை ஏலத்தில்விட தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான குறைந்தபட்ச விலையாக 1.8 மில்லியன் பெசோஸ் (இந்திய மதிப்புக்கு சுமார் ஆறு கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!