நடிகைக்காக 10 லவ் லெட்டர் எழுதிய தல அஜித்.. அவர் மேல அம்புட்டு காதலாம்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் வெளியாக உள்ளது.

ஆனால் ஷூட்டிங் நான் முடிந்தபாடில்லை. ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்களே சோர்வடைந்து விட்டனர்.

தல அஜித் தனது சினிமா கேரியரின் ஆரம்ப காலகட்டங்களில் தன்னுடன் நடித்த பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்வதற்காக கிட்டத்தட்ட பத்து லவ் லெட்டர் எழுதி உள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தல அஜித் ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம். தல அஜித், நடிகை ஹீரா ஆகிய இருவருக்கும் இடையில் கிசுகிசு வந்தது என்பது உண்மைதான்.
ஹீராவின் மீது தல அஜித்துக்கு அளவுக்கதிகமாக காதல் இருந்ததாம். மற்ற நடிகைகளை காட்டிலும் ஹீராவுடன் அஜித் நடிக்கும் படங்களில் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் மிக நெருக்கமாக இருக்குமாம்.

தன் காதலை வெளிப்படுத்துவதற்காக தொடரும் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட பத்துமுறை லவ் லெட்டர் எழுதி கிழித்துப் போட்டு விட்டாராம் தல அஜித். அந்த காதல் கடைசிவரை கைகூடவில்லை.

அதன்பிறகும் பிரபல நடிகை ஷாலினியை அஜித் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.- source: pettai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!