நடிகர் தவசிக்கு நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி…. எவ்வளவு..?


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.


திமுக எம்.எல்.ஏ.வும் டாக்டருமான சரவணன் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். அதேபோல் நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தவசியின் மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசியை நேரில் சந்தித்த நடிகர் சவுந்தரராஜா, நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய 1 லட்சம் ரூபாயை வழங்கிவிட்டு, தன் சார்பாக ரூ.10 ஆயிரத்தையும் வழங்கினார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!