சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளி கொலை..! நடந்தது என்ன..?


அரியானா மாநிலம் குருக்சேத்ரா மாவட்டம் ஜான்சா கிராமத்தில் கடந்த 9-ம் தேதி மாலை டியூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவின் பெற்றோர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தனர். மாணவி கடத்தப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ஒருவனுடைய பெயரை மாணவின் பெற்றோர்கள் புகாரில் குறிப்பிட்டு இருந்தனர். கடந்த சனிக்கிழமை அன்று மாணவியின் சடலம் ஜிந்த் மாவட்டம் புதகேரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமான நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை, இதனாலே இந்த கொடூரச் சம்பவம் நடந்து உள்ளது என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் பலர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.


பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர் எஸ் கே தாத்தர்வால் பேசுகையில், “சிறுமியின் சடலத்தில் அதிகமான காயம் ஏற்பட்டு உள்ளது. சிறுமியின் அந்தரங்கப்பகுதியானது கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு உள்ளது. உள் காயமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொடூரமான முறையில் சிறுமி சித்தரவதை செய்யப்பட்டு உள்ளார் என்பதை காயங்கள் காட்டுகிறது. இதற்கு மூன்று முதல் நான்கு பேர் பொறுப்பாக இருக்கலாம்,”என குறிப்பிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில் முதன்மை குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபராக 12-ம் வகுப்பு மாணவன் பெயர் இடம்பெற்று உள்ளது. இந்நிலையில் மாணவனின் சடலம் ஜோதிசார் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பகுதியில் இருந்து சடத்தை போலீசார் எடுத்து உள்ளனர். மாணவன் உடலில் இடம்பெற்று இருந்த அடையாளங்களை குறிப்பிட்டு அவன்தான் என பெற்றோர் உறுதிசெய்து உள்ளனர். நேற்று இரவு சடலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மாணவனின் உடலில் காயம் எதுவும் தெரியவில்லை, பிரேத பரிசோதனையை அடுத்தே எதுவும் தெரியவரும் என போலீஸ் தெரிவித்துவிட்டது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.-
Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!