நான் சென்னைக்காரன்… அதிர்ச்சியளிக்கும் ஜோ பிடன்!


அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பிடனுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த ஜோ பிடென், மும்பைக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையின்போது, மும்பையில் வசித்து வந்த ஒருவரின் குடும்பப் பெயரைக் குறிப்பிட்டு, அவர் தனக்கு 1972-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்ததாகவும், அவர்கள், இந்தியாவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய அமெரிக்கரின் சந்ததியினர் என்று குறிப்பிட்டிந்தார். அப்போது 29 வயதாக இருந்த பிடென், அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியிருந்தார். அந்த கூற்றை ஆராய விரும்பினேன். ஆனால் அப்போது என்னால் முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், பிடென் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்ச்சியில் பேசுகையில், எனது தாத்தாவின் தாத்தாவுடைய தாத்தாவின் தாத்தாவுடைய தாத்தா ஜார்ஜ் பிடென் கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டனாக இருந்தார். அவர் இந்தியாவிலேயே வாழ்ந்து இந்தியப் பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஜார்ஜ் பிடென் கிழந்திந்திய கம்பெனியில் பணியாற்றியது குறித்த எழுத்துப்பூர்வ ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களது சந்ததியான கிறிஸ்டோபர் பிடென் மற்றும் வில்லியம் ஹென்ரி பிடென் ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியதற்கான ஆவணங்கள் மும்பையில் கிடைத்துள்ளன.

அவர்களில் கிறிஸ்டோபர், பிரின்சஸ் சார்லோட் கப்பலின் காப்டனாக பணியாற்றியுள்ளார். பிறகு ராயல் ஜார்ஜ் கப்பலின் காப்டனாகவும் பதவி வகித்துள்ளார்.

வில்லியம் 1843-ஆம் ஆண்டில் ரங்கூனில் இருந்த போது தனது 51வது வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கிறிஸ்டோபர்தான் இந்தியாவில் வாழ்ந்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஹாரியோத் ஃப்ரீத்தை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தனர். 19 ஆண்டுகள் சென்னையில் வசித்து வந்த கிறிஸ்டோபர் அவரது நற்குணங்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கடற்பயண பாதுகாப்பை மேம்படுத்தவும் அவர் பாடுபட்டார்.

அவர் 1858-ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார். அவரது கல்லறை சென்னை கத்தீட்ரலில் அமைந்துள்ளது. அந்த கல்லறையில், அவரது வளர்ப்பு நாயுடன் இருப்பதுபோன்ற உருவப் படமும், அவரைப் பற்றிய தகவல்களும் கல்லறையில் இடம்பெற்றுள்ளன. சென்னையில் உள்ள அருங்காட்சியத்தின் இணையதளத்தில், சென்னையில் உள்ள முக்கிய நபர்களின் கல்லறைகள் மற்றும் நினைவிடங்கள் பற்றிய பட்டியலிலும், கிறிஸ்டோபர் பிடெனின் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஆனால், வரலாற்று ஆய்வாளர்களோ, கிறிஸ்டோபருக்கோ ஜோ பிடெனுக்கோ எந்த நேரடி தொடர்பும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள். அதேவேளையில், ஜோ பிடென் குறிப்பிடுவது போல, கிறிஸ்டோபர் இந்தியரை மணமுடிக்கவில்லை என்பதால், இந்தக் கூற்றை முற்றிலும் மறுக்கவும் செய்கிறார்கள்.

ஜோ பிடென் கூறுவது ஜார்ஸ் பிடென், ஆனால், கிறிஸ்டோபர் பிடென் ஒரு இந்தியரை மணந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே, வேறு எங்கேனும் ஒரு ஜார்ஜ் பிடன் இருந்திருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.- source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!