செல்பி மோகம்… பெண்ணுக்கு மலை உச்சியில் நடந்த கோர விபத்து..!


மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து இறந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ளது ஜாம் கேட் சுற்றுலாத் தலம். மலைப்பகுதியான இங்கு நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்தார். அப்போது திடீரென தடுமாறிய அவர் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு அந்த பெண்ணை சடலமாக மீட்டனர். முட்புதர்களுக்கு இடையில் அவரது உடல் சிக்கியிருந்தது. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. விசாரணையில் அந்தப் பெண் இந்தூரைச் சேர்ந்த நீது மகேஷ்வரி என தெரியவந்தது.

செல்பி எடுத்தபோது தவறி விழுந்து பெண் மரணம் அடைந்ததால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!