சரியான துணை கிடைக்கவில்லை… 11வது கணவரை வலைவீசி தேடும் பெண்..!


அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சரியான துணை கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும். ஆனால் அவர் தனது தேடலை நிறுத்துவதாக இல்லை என கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான பெண்ணான கேசி என்பவர் இதுவரை 10 திருமணங்களைச் செய்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை பொருத்தமான கணவர் அமையவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் பொருத்தமான துணையினை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இப்போது அவர் தனது 11 வது கணவரை தேடி வருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார். கேசி ஒரு ‘தகுதியான மணமகனை’ கண்டுபிடிக்கும் வரை தொடர்ச்சியாக திருமணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது 10 வது கணவரை விவாகரத்து செய்த கேசி, இதுவரை இத்தனை திருமணங்களைச் செய்து கொண்டது குறித்து சிறிதும் கவலைப்படவில்லையாம். அவரது விருப்பம் ஒரு தகுதியான கணவரை தேர்தெடுப்பது மட்டுமே ஆகும். கேசியின் மிக நீண்ட காலம் நீடித்த ஒரு திருமணம் எட்டு ஆண்டுகள் நீடித்தது, மிகக் குறுகிய காலம் ஆறு மாதங்கள்.

அமெரிக்காவை சேர்ந்த கேசி சில நாட்களுக்கு முன்பு, திருமண உறவை எப்படி வெற்றிகரமாக பராமரிப்பது என்பது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அது தொடர்பான வழி முறைகளை கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

கேசியின் முதல் திருமண வாழ்க்கை எட்டு ஆண்டுகள் நீடித்தது . இரண்டாவது திருமணம் ஏழு ஆண்டுகள் நீடித்தது. மூன்றாவது திருமணம் சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடித்தது. இவருக்கு மூன்றாவது கணவர் மூலம் ஒரு மகன் இருக்கிறான். கணவன் அவளிடம் “ஐ லவ் யூ” சொல்வதை நிறுத்தியதால் இருவருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!