டேய் வெளிய வாடா இப்போ…. சுரேஷை அவன் இவன் என கத்தும் சனம் ஷெட்டி..!


பிக்பாஸ் வீட்டில் தற்போது புது டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். அரக்க வம்சம் என சில பேரும், அரச வம்சம் என சில பேரும் பிரிக்கப்பட்டுள்ளனர். அரச வம்சத்தை சேர்ந்தவர்களை அரக்க வம்சத்தினர் அடிமை படுத்த வேண்டும் என்பதே டாஸ்க்.அதன்படி 2 நாட்களாக இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்று காலை, ஆரியை அடிமைப்படுத்த அரக்க வம்சத்தை சேர்ந்த ரியோ மற்றும் பாலா உள்ளிட்டோர் முயன்ற போது ஆரிக்கு கோபம் உண்டான புரமோ வீடியோ வெளியானது.

இந்நிலையில், சுரேஷ் தனது கையில் வைத்திருக்கும் கம்பால் சனம் ஷெட்டியின் தலையில் அடிக்க கோபமடைந்த சனம் ஷெட்டி, சுரேஷை மரியாதை இல்லாமல் பேசும் புரமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: cinereporters

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!