இணையத்தில் வைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் வின்டேஜ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது தாய் ஷோபாவுடன் தாஜ்மஹால் முன்பு விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!