வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக்கிங்… 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச நெட்டில் பதிவேற்றம்


சிங்கப்பூரில் 50 ஆயிரம்வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக் செய்யப்பட்டு 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றபட்டு உள்ளது.

சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்களை ஹேக் செய்து வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர்.

வீடியோக்களில்பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது.

ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ளாடையோடு புத்தகங்களோடு அமர்ந்திருப்பது உட்பட வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது குழந்தைகள், முதியவர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை தொலைவிலிருந்து கண்காணிக்க நிறுவப்பட்டுள்ள பொதுவான இணைய நெறிமுறை (ஐபி) கேமராக்களிலிருந்து இந்த காட்சிகள் திருடப்பட்டுள்ளன.

வீடியோக்களை நெருக்கமாக பரிசோதித்தபோது, ஐபி கேமராக்களை ஹேக்கிங் செய்ய ஒரு குழு ஒன்று இதன் பின்னால் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. சமூக செய்தி தளமான டிஸ்கார்டில் காணக்கூடிய இந்த குழுவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

சனிக்கிழமை நிலவரப்படி, டிஸ்கார்ட் அரட்டையின் 70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 3TB க்கும் மேற்பட்ட கிளிப்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறுகின்றனர், இதற்காக அவர்கள் ஒரு முறை தவனையாக 150 அமெரிக்க டொலர் சந்தாவை செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

தாய்லாந்து, தென் கொரியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் வீடுகளின் காமிராவிலிருந்து இந்த காட்சிகள் திருடப்பட்டுள்ளன. ஹேக் செய்யப்பட்ட காட்சிகளிலிருந்து சுமார் 4,000 வீடியோக்களும் படங்களும் அடங்கிய 700MB “மாதிரி” இலவசமாக வழங்கப்படுகிறது.

50,000 க்கும் மேற்பட்ட ஹேக் கேமராக்களின் பட்டியல் இருப்பதாக குழு கூறுகிறது. பயிற்சிகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அமர்வுகள் மூலம் ஹேக் செய்யப்பட்ட கமெராக்களை “ஆராய்வது, நேரலையில் பார்ப்பது மற்றும் பதிவு செய்வது” எப்படி என விஐபி உறுப்பினர்களுக்கு கற்பிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸிற்கான ஆசிய-பசிபிக் தீர்வுக் கட்டிடக் கலைஞரான கிளெமென்ட் லீ, பல ஐபி கேமராக்கள் ஆபத்தில் உள்ளன, ஏனெனில் அவை பொதுவாக இணையம் வழியாக தொலைவிலிருந்து அணுகும் வகையில் நிறுவப்பட்டுள்ளன என கூறுகிறார்.

இவ்வாறான குற்றங்களுக்கு காரணம் மோசமான கடவுச்சொல்தான். இதுபோன்ற கேமராக்களை கொண்டிருப்பவர்கள் தங்கள் மென்பொருள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எளிய கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்துகிறார்.

“உங்கள் கேமரா பாதுகாப்பானது என ஒருபோதும் கருத வேண்டாம்,” என்று அவர் எச்சரித்துள்ளார். “ஹேக்கர்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்ப்பதுதான்.” என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட காணொளிகளில் சிறார்களும் இடம்பிடித்துள்ளார்கள் என்பதால் இது சிறார்களக்கு எதிரனா பாலியல் குற்றங்ளில் சேரும் என்று கூறப்படுகின்றது. மேலும், இதுபோன்ற குற்றங்களை களைய இன்டர்போல் போன்ற அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!