எனக்கு திக்குவாய்.. இங்க வந்தேன்.. சோம சேகரின் மறுபக்கம்..!


குழந்தைக்கு அப்படி ஆகிடுச்சு, மகனுக்கு இப்படி ஆகிடுச்சு, கஷ்டப்பட்டு வந்தேன் என இதுவரை போட்டியாளர்கள் சொன்ன கதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட கதை தான் நம்ம நெய் விளம்பர நடிகர் சோமசேகர் கதை.

விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் மற்றும் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் என பன்முகத் தன்மை கொண்ட சோமசேகர், தனது சொந்தக் கதையை மற்ற போட்டியாளர்கள் முன்பு கூறினார்.

தனக்கு திக்குவாய் இருக்கும் ரகசியத்தை போட்டியாளர்கள் முன்பாக வெளிப்படுத்திய அவரை பலரும் பாராட்டினார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் பத்தாவது போட்டியாளராக சோமசேகர் உள்ளே நுழைந்தார். MMA என அழைக்கப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் சோமசேகர் தேர்ச்சி பெற்றவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் போட்டியில் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். 5ம் நாள் எபிசோடில் அவரது சொந்தக் கதையை சொன்ன்னார்.

மிடில் கிளாஸ்ல இருந்து வந்தவன் தான் நான் என பேச ஆரம்பித்த சோமசேகர் லவ் பண்ணேன், ஆனால், அது ஃபெயிலியர் ஆகிடுச்சு, அப்புறம் கெட்ட பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டேன். அதுல இருந்து வெளியே வர என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்பத் தான் MMAவில் சேர்ந்தேன் அப்புறம் என் லைஃப் கொஞ்சம் கொஞ்சமா மாறியது என்றார்.

அந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியாமல், அப்செட்டான படியே ஆரம்பித்தார் சோமசேகர். இதுவரைக்கும் உங்க யாருக்கும் தெரியாத ஒரு உண்மையை சொல்றேன், எனக்கு சின்ன வயசுல இருந்தே திக்குவாய்.. எங்க அம்மாக்கு மட்டும் தான் அது தெரியும், நிறைய நண்பர்கள் கிட்ட போன்ல பேசாம இருந்ததற்கும் அதுதான் காரணம் எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க என்றார்.

உதய கிருஷ்ணா நெய், த்ரீ ரோசஸ் டீ விளம்பரம் என ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ள சோமசேகர், சில படங்களிலும் நடித்துள்ளார். சூர்யாவின் சூரரைப் போற்று படத்திலும் ஐஏஎஃப் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் பட வாய்ப்புகள் கிடைச்சுட்டு வருது, ஆனால் அதையெல்லாம் என் திக்குவாய் கெடுக்குது என்றும் வருத்தப்பட்டார்.

பெருசா, ஸ்கூல், காலேஜ்லலாம் நான் பேசுனதே கிடையாது, உங்க முன்னாடி இப்ப பேச வாய்ப்பு கிடைச்சதே சந்தோஷமா இருக்கு என சோமசேகர் உற்சாகமாக பேசியதை பார்த்த போது, அடப்பாவி எங்களை எல்லாம் கலாய்க்கும் போது கூட உனக்கு திக்குவாய் என தெரியாதே என்றார்கள் சக போட்டியாளர்கள். சென்சிட்டிவான ரகசியத்தை போட்டு உடைத்ததால், பிக் பாஸ் எவிக்‌ஷனில் இருந்து சோமசேகர் தப்பி உள்ளார்.-source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!