டிக் டாக்கில் வீடியோ பதிவிட ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!


மெக்ஸிக்கோவில் டிக் டாக் செயலில் பதிவிட வினோதமான வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 20 வயது பெண் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிக்கோவைச் சேர்ந்த 20 வயதான அரேலைன் மார்டினெஸ் என்ற இளம்பெண் டிக் டாக் செயலில் அவர் கடத்தப்பட்ட அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டதாக நடித்து பல வினோதமான வீடியோக்களை பதிவு செய்த பதிவிட்டு வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மெக்சிகன் நகரமான சிவாவாவில் குறைந்தது 10 நண்பர்கள் குழுவுடன் அரேலைன் மார்டினெஸ் தன்னை துப்பாக்கி முனையில் கடத்துவது போன்று நடித்து வீடியோ பதிவு செய்துள்ளார். இதன் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் தலையில் சுடப்பட்ட அரேலைன் மார்டினெஸ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மார்டினெஸ் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட உடனேயே ஜீப்பில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டதாக பொலிசார் கூறினாலும், தற்போது வரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. இளைஞர்கள் துப்பாக்கியில் தோட்டா இல்லை என்று நினைத்து சுட்டதாகவும், அதில் அப்பெண் இறந்துள்ளார் என கருதுவதாக சிவாவா அட்டர்னி ஜெனரல் Cesar Augusto Peniche Espejel உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.- source: lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!