பிக்பாஸ் சீசன் 4! யாரெல்லாம் களமிறங்கியுள்ளார்கள் பார்த்தீர்களா..?


பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கப்பட்டது. உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு பூங்கொத்தோடு உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது நெதர்லாந்து நாட்டின் பிக் பிரதர் நிகழ்ச்சியின் சாயலைக்கொண்ட ஒரு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி இது வரை வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடன்துள்ளது. தற்போது இதன் நான்காவது சீசன் வெற்றிகரமாக நேற்று தொடங்கியது. இந்த முறையும் இந்த நிகழ்ச்சியினை உலக நாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் பட்டியல் வருமாறு:
1. ரியோ – நிகழ்ச்சி தொகுப்பாளர்
2. சனம் – திரைப்பட நடிகை
3. ரேகா – திரைப்பட நடிகை
4. பாலாஜி – மாடல்
5. அனிதா சம்பத் – செய்தி வாசிப்பாளர்
6. ஷிவானி – தொலைக்காட்சி நடிகை
7. ஜித்தன் ரமேஷ் – திரைப்பட நடிகர்
8. வேல்முருகன் – பின்னணி பாடகர்

9. ஆரி – திரைப்பட நடிகர்
10. சோமு சேகர் – மிக்ஸட் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைஞர்
11. கேப்ரெல்லா – டான்சர்
12. அறந்தாங்கி நிஷா – நகைச்சுவை நடிகை
13. ரம்யா பாண்டியன் –
14. சம்யுக்தா – மாடல் அழகி
15. சுரேஷ் சக்ரவர்த்தி – திரைப்பட நடிகர்
16. ஆஜீத் – பின்னணி பாடகர்

16 போட்டியாளர்களை கொண்டு பிக் பாஸ் நான்காவது சீசன் நேற்று தொடங்கிவிட்டது. வழக்கமாக ஜூன் மாதங்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இந்த முறை கொரோனா ஊரடங்கு காரணமாக தல்லிப்பொடப்பட்டிருந்தது. தற்போது தலர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிகழ்ச்சி வெற்றி கரமாக நேற்று தொடங்கியது.- source: cine.kadhir

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!