முகம் மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லினை எப்படி பயன்படுத்தலாம்..?


வாஸ்லின் பல்வேறு அழகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. சருமம் பராமரிப்பு மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லினை பயன்படுத்தி நமது சரும அழகை மெருகேற்றுவது குறித்து இங்கே காண்போம்.

நமது தோலில் புரோட்டீன்கள் இருப்பதால், மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தூங்குவதற்கு முன்பு வாஸ்லினை கொண்டு செய்ய வேண்டும். இதனை தொடந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறண்ட மேல்புற தோல்லை சரி செய்யும். சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி, சிராய்ப்புகள் வராமல் தடுக்கவும் வாஸ்லின் பயன்படுகிறது.

வாசலினை பயன்படுத்தி கண்களில் போடப்பட்டுள்ள மேக் அப்பை ஒரு சில விநாடிகளில் எளிதாக அகற்றிவிடலாம். கண்களில் போட்ட மேக்கப்பை சாதாரணமாக கழுவ கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை (vaseline) தடவுங்கள். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது.

சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். இதனால் முடியில் பிளவு ஏற்பட்டு அசிங்கமாக இருக்கும். அதனை சரி செய்ய சிறிய அளவு வாஸ்லினை எடுத்து முடியும் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள சுருள்களை அகற்றி, முடி பிளவுகளை சரி செய்யும். இதை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் கிரீஸி கூந்தலாக மாற்றிவிடும். கூந்தல் நுனிப் பகுதியில் உள்ள சிபிளவை சரி செய்து, வறண்ட நிலையை வாஸ்லின் நீக்கும்.

கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். மற்ற லோஷன்களை விட வாஸ்லின் பாதங்களை மிருதுவாக்குகிறது.

உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. வாஸ்லின் கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்தால் இமை முடிக்கள் வளரும். கண் இமை ரோமங்கள் நன்றாக இருந்தால் கண்கள் அழகா இருக்கும்.

சருமத்தில் உள்ள பருக்களை நீக்கவும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் வாஸ்லின் ஜெல்லை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் முகப்பரு காரணமாக உருவாகும் வடுக்களும் மறைந்து விடும்.

முக சுருக்கங்களை குறைக்க வாஸ்லினை பயன்படுகிறது. வாஸ்லினை சுருக்கமிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக கண்கள் ஓரத்தில் மற்றும் கன்னங்களின் ஓரத்தில் தடவுங்கள். தினமும் காலை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் வாஸ்லினை (vaseline) கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சுருக்கங்கள் மறைவதை கண்கூடாக காணலாம்.

வாஸ்லினை கொண்டு மென்மையான உதடுகளை பெறலாம். அதற்கு கொஞ்சம் வாஸ்லினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து துடைத்துவிடுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகும். இதன் பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் எடுப்பாக இருக்கும்.

நகங்களுக்கு வாஸ்லினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும். வாஸ்லினில் இருக்கும் நல்ல ரசாயன மூலக்கூறுகள் நகங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமான நகங்கள் வளர்கின்றது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!