பூர்வீக வீட்டையே மடத்திற்கு தந்தார்… எஸ்பிபிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் இரங்கல்


பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்ககூடிய ஒன்றாகும்.

திரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.

காஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!