வலி நிவாரணி மாத்திரைகளை வைத்து மாணவர்களை சீரழித்து வந்த கல்லூரி மாணவன்..!


வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக அதிக விலைக்கு விற்று, கல்லூரி மாணவர்களை சீரழித்து வந்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ்(22). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயது மாணவியின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பலாத்காரம்.. ஊழியர் கைது

வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்கி அதிக விலைக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என பலதரப்பு மக்களுக்கும் போதைக்காக இவர் நீண்ட நாட்களாக விற்பனை செய்து வந்துள்ளார்.
அதே போல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 350 ரூபாய்க்கு ஒரு மாத்திரை என மூன்று மாத்திரைகளை விற்றுள்ளார். அதனை அவர் தண்ணீரில் கரைத்து நீர்க்கரைசலாக மாற்றி ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு கண் எரிச்சலும், வாந்தியும் வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதன் மூலம் ஆதம்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நீண்ட நாட்களாக போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் கல்லூரி மாணவர்களை சீரழித்து வந்த சமூக விரோதியான விக்கி(எ) விக்னேஷை கைது செய்து அவரிடம் இருந்து 27 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!