மதுபான விற்பனை அரசிதழ் அறிவிப்புகளை ரத்துச் செய்வதாக மைத்திரி அறிவிப்பு..!


மதுபான விற்பனை தொடர்பாக சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவித்தல்களை ரத்துச் செய்யப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மதுபான நிலையங்களைத் திறந்து வைத்திருப்பதற்கான நேரத்தை அதிகரித்தும், பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு இருந்து வந்த தடையை நீக்கும் வகையிலும், நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் இரண்டு அரசிதழ் அறிவித்தல்களை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, மதுபான விற்பனை நிலையங்கள் காலை 8 மணி தொடக்கம், இரவு 10 மணி வரை திறந்திருக்க முடியும்.

அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்கும், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவதற்கு இருந்து வந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த தடை 1979ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த இரண்டு அரசிதழ் அறிவித்தல்களையுமே ரத்துச் செய்யப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அகலவத்தையில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!