தியேட்டர் வளாகத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு..!


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளை சாலையில் வீசி செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறு சாலையில் வீசிய குழந்தைகளை மீட்டு காப்பகங்களிலும் ஒப்படைக்கப்படுகின்றன.

இந்நிலையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த குழந்தையின் உடலை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!