மூச்சு விடாமல் பாடிய எஸ்பிபிக்கு இந்த நிலைமையா..?


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இருந்தாலும் இன்னும் வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று நேற்று சந்தோஷ செய்தி வெளியானது.

ஆனால், இன்னும் அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகள் உதவியுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவருக்கு முழுமையாக நினைவு திரும்பியுள்ளது என்றும், பிறா் பேசுவதை உணா்ந்து சைகையில் பதில் அளிக்கிறார் என்றும் தெரிவித்து இருந்தனர்.

சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறாா். மருத்துவக் குழுவினா் அவரது உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று எம்ஜிஎம் மருத்துவமனை சமீபத்தில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தது. இதை அவரது மகன் எஸ்பி சரணும் உறுதி செய்து இருந்தார்.

இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நலம் குறித்து எஸ்பி சரண் நேற்று வெளியிட்டு இருந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவில், ”எனது தந்தையின் நுரையீரல் செயல்பாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதால் வெண்டிலேட்டர் உதவி தேவையிருக்காது என்று கருதினோம். ஆனால் வெண்டிலேட்டரை நீக்கும் அளவுக்கு அவரது நுரையீரலில் முன்னேற்றம் இல்லை. அவர் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார். நுரையீரல் பாதிப்பு விரைவில் குணமடைய வேண்டும். குணமடைந்து வந்தாலும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது, தேவைப்படுகிறது.

கடந்த வார இறுதியில் அப்பா, அம்மாவின் திருமண நாள் வந்திருந்தது. அந்த நாளை சிறிய அளவில் கொண்டாடினோம். தன்னுடைய ஐ பேடில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளை கண்டு களிக்கிறார். எழுதுவதன் மூலம் எங்களுடன் செய்திகளை பரிமாறிக் கொள்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நம்பிக்கையுடன் இருப்போம்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் எஸ்.பி.பிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக கொரோனா வைரஸ் தொற்று நுரையீரலை அதிகமாக பாதிக்கும் என்பதால், இவருக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மூச்சு விடாமல் பாடிய எஸ்பிபிக்கா இன்று இந்த நிலைமை என்று வருத்தமடையச் செய்துள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!