குளு குளுவென்று இருந்த நம்ம லட்சுமி மேனனா இது !! – ரசிகர்கள் வியப்பு..!


தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் போதே நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அறிமுகமான காலத்தில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன.

குறுகிய காலத்திலேயே தமிழில் சில வெற்றிப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்தவர். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

அவர் சினிமாவில் அறிமுகமாகி 8 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இப்போதும் பள்ளி மாணவி போன்று தான் இருக்கிறார் லட்சுமி மேனன். ஆனால் திடீரென சினிமாவில் இருந்து அவர் விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறது. அதில் முன்பைவிட இப்போது அழகில் மேலும் மெருகேறியுள்ளார்.


அதேநேரத்தில் குளு குளுவென்று இருந்த நம்ம லட்சுமி மேனனா இப்போது இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டார் என ரசிகர்கள் ஆச்சரியம் படுகின்றனர். அந்த அளவுக்கு மாறிவிட்டார்.

லட்சுமி மேனனின் புதிய புகைப்படங்களைப் பார்க்கும் இயக்குனர்கள் அவரை உடனடியாக நடிக்க அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ரசிகர்கள் கமாண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது கைவசம் புதிய படங்கள் ஏதும் இல்லை என்றாலும் விரைவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் ஏக்கத்தை தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!