அரசு மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்த உடல்..!


கதக் ஜிம்ஸ் அரசு மருத்துவமனையின் லிப்டில் கொரோனாவுக்கு பலியான ஒருவரின் உடல் 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இது வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கதக் (மாவட்டம்) டவுனில் ஜிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என்றும், கொரோனா தாக்கி பலியானவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்யாமல் ஆங்காங்கே போட்டு வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இந்த மருத்துவமனையின் லிப்டில் கொரோனாவுக்கு பலியான ஒருவரின் உடல் 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் மாடி படிக்கட்டுகளில் முழு கவச உடைகளை கழற்றி ஊழியர்கள் போட்டுள்ளனர். இதை ஒரு நோயாளி செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இது வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து லிப்டில் இருந்து, கொரானாவுக்கு பலியானவரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!