சிறுமிகளை கற்பழித்த பள்ளிக்கூட காவலாளிக்கு தூக்கு தண்டனை – மராட்டிய கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!


மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் பந்துர்ணா கிராமத்தில் உள்ள உண்டு- உறைவிட பள்ளிக்கூடத்தில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் ராஜ்குமார் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்குமார், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தினார். மேலும், 2 சிறுமிகளை தனிமையில் அழைத்து சென்று கற்பழித்தார்.

அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரும் சிக்கினார்.


இந்த வழக்கின் மீதான விசாரணை வார்தா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி அஞ்சு ஷிண்டே நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் ராஜ்குமாரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த நபருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!