செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க வழங்கும் வடகொரிய அதிகாரிகள்..!


வடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க அந்த நாட்டு அதிகாரிகள் வழ்ங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று, வடகொரியாவின் 2.55 கோடி மக்கள் தொகையில் 60 சதவிகிதம்பேர் உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறது.அணு ஆயுத திட்டங்கள் காரணமாக வட கொரியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால், நாட்டின் நிலைமை மேலும் மோசமாகிவருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இன்னொருபக்கம், கொரோனாவால் சீன எல்லை மூடப்பட, தன் நாட்டு மக்களுடைய உணவுத்தேவைக்காக சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் வடகொரியாவின் நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த ஆண்டு நாடு சந்தித்த பெருவெள்ளம் முதலான இயற்கை சீற்றங்களால் விளைச்சல் பாதிக்கப்பட, பன்றி இறைச்சியும், மாட்டு இறைச்சியும் பணக்காரர்களுக்கு மட்டுமே என கருதப்படும்
நிலை உருவாகி உள்ளது. வரும் மாதங்களில் நாய் இறைச்சிதான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்குகிறது என அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வட கொரிய அதிகாரிகள் குடிமக்களிடமிருந்து நாய்களைப் பறித்து ஒட்டல்களுக்கு வழங்குவதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை முதுகுக்குப் பின்னால் விமர்சித்து வருவதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால், அவர்கள் செல்லப்பிராணிகளை கொடுக்க மறுத்தால், அது நாட்டின் தலைமைக்கு கீழ்ப்படிய மறுத்ததாக கருதப்படும் என்பதால் வேறு வழியின்றி செல்லப்பிராணிகளை ஒப்படைத்து வருகிறார்களாம்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!