எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி..!


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை தொடர்ந்து அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார் என்றும் கூறினார். தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!