மொத்தம் 3 பேர்.. ரோட்டில் வரிசையாக வெட்டி சாய்த்த கோடீஸ்வரன்..!


ரோட்டில் சென்று கொண்டிருந்த தன்னுடைய பெரியப்பா, பாட்டி உட்பட 3 பேரையும் அரிவாளை எடுத்து சரசரவென வெட்டிவிட்டார் கோடீஸ்வரன்.. இதையடுத்து வீட்டுக்குள் போய் பதுங்கி கொண்ட இவரை மயக்க ஸ்பிரே அடித்து.. 3 மணி நேரம் போராடிதான் போலீசார் பிடித்து கைது செய்தனர்.. இந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாளப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்.. இவர் ஒரு ரவுடி.. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஜெயிலுக்கு போயிட்டு, 10 நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து கொண்டு அவரது பெரியப்பா பெரியண்ணனை வெட்டுவதற்காக கோடீஸ்வரன் வெளியே சென்றுள்ளார்.. சாலையில் சென்று கொண்டிருந்த பெரியப்பா, பாட்டி லட்சுமி, ராசிபுரத்தை சேர்ந்த நரேஷ்குமார் உட்பட 3 பேரையும் திடீரென அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டார்.. இதில் அந்த பாட்டி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

நடுரோட்டிலேயே இந்த 3 கொலைகளையும் இந்த இளைஞர் அசால்டாக செய்துவிட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. சிலர், கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்த கோடீஸ்வரனை பிடிக்க முற்பட்டனர்.. அதற்குள் அவர் ஓடிப்போய் வீட்டிற்குள் புகுந்து கொண்டு கதவையும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.

இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து பாட்டியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

இதனிடையே வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் வெளியே வரவே இல்லை.. இருந்தாலும் அவர் தப்பி வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்கள் வீட்டுக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.. அதற்குள் போலீசாரும் வந்துவிட்டனர்.. பதுங்கியிருந்த கோடிஸ்வரனை பிடிக்க முயன்றனர்.. ஆனால் அவர்களுக்கே டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தனர்.

கடைசியில் மயக்க ஸ்பிரே அடித்து, 3 மணிநேரம் போராடிதான் கோடீஸ்வரனை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி விட்டது. இனிமேல்தான் 3 பேரையும் அவர் அரிவாளால் வெட்டினார் என்று விசாரணையில் தெரியவரும். ஆனால் கோடீஸ்வரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. வேலைக்கு நிறைய இடங்களில் முயற்சித்தாராம்.. அதற்காக நிறைய பேரிடம் பணம் தந்து இவர் ஏமாந்தும் உள்ளார்.. இதனால்தான் ஊருக்குள் பலரிடம் பிரச்சனை செய்து ஜெயிலுக்கும் போனாராம்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!